புனித ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறையின் புதிய முயற்சியாக, IEEE SJCE SB மாணவர் மன்றம் – IEEE SJCE Student Branch Chapter, IEEE Madras Section உடன் இணைந்து நமது பிராந்திய மொழியை ஊக்குவிக்கும் வகையில் வித்தகம் 2021 என்னும் தமிழ் இணைய மேடை சொற்பொழிவுத் தொடரை ஏற்பாடு செய்தது. நவம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை, கூகுள் சந்திப்பில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. தலைப்புகள் தமிழ் வரலாறு மற்றும் தமிழ் இலக்கியங்கள் தொடர்பானவை. அனைத்து சொற்பொழிவுகளுக்கான விரிவான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழின் இனிமையும் வளமையும்
“தமிழின் இனிமையும் வளமையும்” தலைப்பில் முதல் சொற்பொழிவுக்கான அறிக்கைபுனித ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் IEEE SJCE SB மாணவர் மன்றம் மற்றும் IEEE Madras Section உடன் இணைந்து நடத்திய வித்தகம் 2021 என்னும் தமிழ் இணையமேடை சொற்பொழிவு தொடர் நடத்தப்பட்டது.இச்சொற்பொழிவின் முதல் நாளன்று தமிழ் மீது அதீத பற்றுள்ள திருமதி.ஹெலன் வந்தனா ஒரு தமிழ் பண்டிதர் ஆவார், அவர் கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு தமிழ் கற்பிப்பதில் தனது வாழ்க்கையைக் கழித்துள்ளார், மேலும் அந்த நேரத்தில் நிறைய கற்றுக்கொண்டார். அவர் தனது துறையில் தனது பங்களிப்பிற்காக நன்கு அறியப்பட்டவர். தமிழில் அவரது ஆர்வம் அவருக்கு பல கதவுகளைத் திறந்துள்ளது, மேலும் அவர் நிறைய ஆய்வுகளைச் செய்துள்ளார்.தமிழின் இனிமையும் வளமையும் என்னும் தலைப்பில் அவரது சொற்பொழிவு அன்று இருந்தது அதில் அவர் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி முதலில் கூறினார். பின்னர் தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண வளங்களை பற்றியும் கூறிவிட்டு பின்னர் ஒரு அழகான தமிழ் கவிதை மூலம் தன்னுடைய உரையை முடித்தார்.சுமார் 50 பங்கெடுப்பாளர்களுக்கு மேல் கலந்து கொண்டு அந்த சொற்பொழிவை சிறப்பித்தனர்.
இணை அமைப்பு அலகு : IEEE SJCE SB மாணவர்மன்றம்
நடத்தப்பட்ட தேதி : 30 /11/ 2021
பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை :50
கவிஞர் கண்ணதாசன் தமிழ்முழக்கம்
“கவிஞர் கண்ணதாசன் தமிழ் முழக்கம்” தலைப்பில் இரண்டாம் சொற்பொழிவுக்கான அறிக்கைபுனித ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் IEEE SJCE SB மாணவர் மன்றம் மற்றும் IEEE Madras Section உடன் இணைந்து நடத்திய வித்தகம் 2021 என்னும் தமிழ் இணையமேடை சொற்பொழிவு தொடர் நடத்தப்பட்டது.சொற்பொழிவின் 2 வது நாள் தமிழ் மீது உணர்ச்சியார்வம் மிகுந்த பேச்சாளர் முனைவர் கார்முகில் பழனிசாமி திங்களூர் அவர்கள் முன்னிலையில் துடிப்பானதாக இருந்தது. முனைவர் கார்முகில் பழனிசாமி திங்களூர் அவர்கள் ஓய்வு பெற்ற என்.எல்.சி உதவி அதிகாரி ஆவார்.கவிஞர் கண்ணதாசன் தமிழ் முழக்கம் என்னும் தலைப்பின் கீழ் இருந்தது. அவர் தனது உரையை கவிஞர் கண்ணதாசனின் வாழக்கை வரலாற்றில் தொடங்கினார். பின்னர் அவர் கண்ணதாசனின் சிறந்த தமிழ் படைப்புகள் விளக்கினார். இடையில் அவர் கவிஞரின் பாடல்களைப் பாடி சுவாரஸ்யமாக சொற்பொழிவைக் கொண்டுச் சென்றார்.சுமார் 50 பங்கேற்பாளர்கள் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 2 வது சொற்பொழிவில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இணை அமைப்பு அலகு : IEEE SJCE SB மாணவர்மன்றம்
நடத்தப்பட்ட தேதி : 05 /12/ 2021
பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை :50
தரணி போற்றும் தமிழர்பண்பாடு
“தரணி போற்றும் தமிழர் பண்பாடு” தலைப்பில் மூன்றாம் சொற்பொழிவுக்கான அறிக்கைபுனித ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் IEEE SJCE SB மாணவர் மன்றம் மற்றும் IEEE Madras Section உடன் இணைந்து நடத்திய வித்தகம் 2021 என்னும் தமிழ் இணையமேடை சொற்பொழிவு தொடர் நடத்தப்பட்டது.சொற்பொழிவின் 3 வது நாள் தமிழ் மீது உணர்ச்சியார்வம் மிகுந்த பேச்சாளர் செல்வஸ்டன் பிரபு .ம M.A, M .Phil, M.Ed. அவர்கள் முன்னிலையில் துடிப்பானதாக இருந்தது. செல்வஸ்டன் பிரபு, தஞ்சையில் பிறந்து MA,DLITபட்டம் பயின்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 36ஆண்டுகள் பணியாற்றி உதவி அலுவலராக ஓய்வுபெற்ற இவர் தமிழ் மீதுபற்று கொண்டு பல்வேறு தமிழ் அமைப்புகளை நிறுவி தமிழ் பணியாற்றியவர்.தரணி போற்றும் தமிழர் பண்பாடு என்னும் தலைப்பின் கீழ் இருந்தது.அவர் தனது உரையை “ நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என தொடங்கினார். பின்னர் அவர் தமிழரின் பண்பாட்டையும் அதன் பெருமை மற்றும் அதன் சிறப்பு பற்றி பேசினார்.சுமார் 50 பங்கேற்பாளர்கள் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 3 வது சொற்பொழிவில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இணை அமைப்பு அலகு : IEEE SJCE SB மாணவர்மன்றம்
நடத்தப்பட்ட தேதி : 09 /12/ 2021
பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை :50
மனதில் உறுதி வேண்டும்
“மனதில் உறுதி வேண்டும்” தலைப்பில் நான்காம் சொற்பொழிவுக்கான அறிக்கைபுனித ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் IEEE SJCE SB மாணவர் மன்றம் மற்றும் IEEE Madras Section உடன் இணைந்து நடத்திய வித்தகம் 2021 என்னும் தமிழ் இணையமேடை சொற்பொழிவு தொடர் நடத்தப்பட்டது.சொற்பொழிவின் 4 வது நாள் தமிழ் மீது உணர்ச்சியார்வம் மிகுந்த பேச்சாளர் பெ.மலர்க்கொடி அவர்கள் முன்னிலையில் துடிப்பானதாக இருந்தது. பெ மலர்க்கொடி நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து தனது பள்ளிப்படிப்பை பழையபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் தனது இளங்கலைப் பட்டத்தை முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியிலும் முதுகலை பட்டத்தை திருச்சி புனித வளனார் கல்லூரியிலும் பெற்றார். தற்போது PCO at HPPWS NGOவில் பணியாற்றி வருகிறார்.”மனதில் உறுதி வேண்டும்” என்னும் தலைப்பின் கீழ் இருந்தது. அவர் தனது உரையில் மாணவர்கள் எவ்வாறு மனதளவில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதை பற்றி விளக்கி சொற்பொழிவை அருமையாக கொண்டு சென்றார்.சுமார் 40க்கும் மேலான பங்கேற்பாளர்கள் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 4 வது சொற்பொழிவில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இணை அமைப்பு அலகு : IEEE SJCE SB மாணவர்மன்றம்
நடத்தப்பட்ட தேதி : 18 /01/ 2022
பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை :50
தற்கால புது கவிதைகள்
“தற்கால புது கவிதைகள்” தலைப்பில் ஐந்தாம் சொற்பொழிவுக்கான அறிக்கைபுனித ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் IEEE SJCE SB மாணவர் மன்றம் மற்றும் IEEE Madras Section உடன் இணைந்து நடத்திய வித்தகம் 2021 என்னும் தமிழ் இணையமேடை சொற்பொழிவு தொடர் நடத்தப்பட்டது.சொற்பொழிவின் 5 வது நாள் தமிழ் மீது உணர்ச்சியார்வம் மிகுந்த பேச்சாளர் தாய்.ராசி.ஜெகதீஸ்வரன் அவர்கள் முன்னிலையில் துடிப்பானதாக இருந்தது. தாய்.ராசி.ஜெகதீஸ்வரன் அவர்கள் 20 ஆண்டுகள் ஏழ்மையான குழந்தைகளுக்கான இல்லம் நடத்தி வருகிரார். இவர் தாய் தொலைக்காட்சின் நிறுவனர் ஆவார். அதுமட்டுமின்றி பதினைந்துக்கு மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார்,இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார்.தற்கால புது கவிதைகள் என்னும் தலைப்பின் கீழ் இருந்தது.அவர் தனது உரையை “ மனித வாழ்க்கை” என்ற பாடல் உடன் தொடங்கினார். பின்னர் அவர் தமிழர் பெருமை அடையும் வகையில் உள்ள பாடல்களின் தொகுப்பையும் கவிதைகளின் வரலாற்றையும் விவரித்தார் .சுமார் 50 பங்கேற்பாளர்கள் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 5 வது சொற்பொழிவில் கலந்து கொண்டு பயனடைந்தனர்இத்துடன் வித்தகம் 2021 முடிவடைகிறது, இது தமிழில் நடத்தப்பட்ட முதல். சொற்பொழிவுத் தொடராகும். இது ஒரு வெற்றியையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாகியிருது
இணை அமைப்பு அலகு : IEEE SJCE SB மாணவர்மன்றம்
நடத்தப்பட்ட தேதி : 19/01/ 2022
பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை :50